அவல் லட்டு செஞ்சு அசத்துங்க ஐந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம்

அவல் லட்டு செஞ்சு அசத்துங்க ஐந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம்
இதனை share செய்யுங்கள்

அவல் லட்டு செஞ்சு அசத்துங்க ஐந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம்

அவல் லட்டு செஞ்சு அசத்துங்க .இந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம் .
ஆம் உண்மை தான் .பத்து நிமிடத்தில் விரைவாக செய்திடவல்லது ,இந்த லட்டு .

வாங்க இப்போ ,அவல் லட்டு செய்வது எப்படி என்பதை பார்ப்போம் .

செய்முறை ஒன்று

மிக்சி எடுத்திருங்க ,அதில ஒன்றை கப் அளவுக்கு அவல் போடுங்க .
அந்த அவலை மா போல நன்றாக அரைத்து எடுத்திடுங்க .

அது போலவே மிக்சியில், வறுத்த வேர் கடலை எடுத்து, அதனையும் மா போல அரைத்து எடுத்திருங்க .

அவல் லட்டு செஞ்சு அசத்துங்க ஐந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம்


அதன் பின்னர் ,இப்போ அடுப்பில பாத்திரம் வைத்து, அதில ஒரு கரண்டி நெய் விட்டிருங்க .

நெய் சூடானதும் ,பத்து முந்திரி பருப்பு போட்டு ,அதனை நன்றாக வறுத்து வாங்க ,அந்த முந்திரி பருப்பு கலர் மாறி வந்ததும் பிறிம்பாக எடுத்து வைத்திருங்க .

இப்போ அதே கடாயில் உள்ள நெய்யில் ,தேங்காய் துருவலை வறுத்து எடுத்திருங்க .இரண்டு நிமிடம் வறுத்த பின்னர் வாசம் வந்திடும் தேங்காய் துருவல் ,அதன் பின்னர் அதனை எடுத்து வைத்திருங்க .

பின்னர் அதே பாத்திரத்தில் முக்கால் கப் அளவிற்கு வெல்லம் போட்டு வறுத்து வாங்க .வெள்ளம் நன்றாக கரைந்ததும் அதை அதே பாத்திரத்தில் விட்டிருங்க .

அதன் பின்னர் வறுத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்திடுங்க .வெல்லத்துடன் தேங்காய் துருவலை நன்றாக கலக்கி வாங்க .

பொடி பண்ணி வைத்துள்ள அவலை இப்போ கலந்திருங்க .கலந்த பின்னர் நனறாக கலக்கி வாங்க .பின்னர் வறுத்து வைத்துள்ள வேர் கடலையை அப்டியே சேர்த்து கலக்கி வாங்க .

நன்றாக கலக்கி வந்த பின்னர் ,அரை கரண்டி ஏலாக்காய் தூள். முந்திரி பருப்பு அது கூட நெய் சேர்த்து கலக்கி விடுங்க .

இப்போ நன்றாக கலக்கிய பின்னர் ,அதே சூட்டில் லட்டு போல பிடித்திருங்க .
மெல்லிய சூட்டில் லட்டு பிடிக்க மிக இலகுவாக இருக்கும் .

இது தாங்க அவல் லட்டு. அப்புறம் என்ன செய்து அசத்துங்க .

மிக சுவையான இலகுவான சூப்பரான அவல் லட்டு ரெடியாகிடிச்சு .மக்களே .


இதனை share செய்யுங்கள்

Author: தமிழ் சமையல்