இப்படி தொதல் செய்து பாருங்க வாயில் வைத்ததும் கரையும்

இப்படி தொதல் செய்து பாருங்க வாயில் வைத்ததும் கரையும்
இதனை share செய்யுங்கள்

இப்படி தொதல் செய்து பாருங்க வாயில் வைத்ததும் கரையும்

இப்படி தொதல் செய்து பாருங்க , வாயில் வைத்ததும் கரையும் .
செம சுவையாக இருக்கும் .

இந்த தொதல் உலக நாடுகளிலும் அதிகம் விற்பனையாகிறது .இந்த தொதலை கண்டு பிடித்தவர்கள் தமிழர்கள் தாங்க .

ஆனால் அதிகமான நாட்டு மக்கள், இந்த தொதல் விரும்பி சாப்பிடுறாங்க .

தொதல் செய்வது எப்படி ..?
இந்த தொதல் செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?

வாங்க தொதல் செய்வது எப்படி என்பதை இந்த பக்கத்தில் பார்க்கலாம் .

செய்முறை ஒன்று

சுவையான இந்த தொதல் செய்திட அரைகிலோ மஞ்சள் வாழைப்பழம் எடுத்திடுங்க .
அரைக்கிலோ வாழைப்பழத்தை நன்றாக மிக்சியில போட்டு அரைத்திடுங்க .

250 கிராம் வெள்ளம் ( சக்கரை ) எடுத்திடுங்க .வெள்ளம் கரைவதற்கு கொஞ்சம் தண்ணீர் சேர்த்திடுங்க .
வெள்ளம் கரைத்த பின்னர் சிறிது நேரம் கொதிக்க வைத்து எடுத்திருங்க

அடுப்பில கடையா வைத்து அது சூடாகியதும் ,நான்கு கரண்டி நெய் சேர்த்திடுங்க .இப்போ அரைத்து வைத்துள்ள ,வாழைப்பழ சாறை இதற்குள் ஊற்றிடுங்க .நெய்யில் வாழைப்பழத்தை நன்றாக வதக்கி வாங்க .

கலர் மாறி வரும் வரைக்கும் கெட்டியாக வதக்கி கொள்ளுங்க .

கெட்டியாக வந்த பின்னர் ,அரை கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்திடுங்க .
கரைத்து வைத்துள்ள வெல்லத்தை ,வடிய வைத்து ,இதற்குள் ஊற்றிடுங்க .
இப்போ அடி பிடிக்காம நன்றாக கலக்கிருங்க .

இப்படியே கலக்கி நன்றாக கெட்டியாக வந்த பின்னர் .இரண்டு கரண்டி நெய் சேர்த்திடுங்க .அடி பிடிக்காம நன்றாக கலக்கி வாங்க .

நன்றாக கெட்டியாக வந்த பின்னர், முந்திரி பருப்பு சேர்த்து கலக்கிடுங்க .
நன்றாக கெட்டியாக வரும் வரைக்கும் ,அடி பிடிக்காம கிண்டி கலக்கி வாங்க .

இப்போ அந்த கெட்டியாக உள்ளதை ஒரு தட்டில கொட்டிடுங்க .

நன்றாக சூடு ஆறியதும் ,குளிர் சாதான் பெட்டியில் வைத்து எடுத்திடுங்க .அதன் பின்னர் ,நன்றாக இறுகி வந்ததும், கத்தியால் துண்டு துண்டாக வெடி எடுத்திடுங்க .


அப்புறம் ஒரு டீ கூட சேர்த்து சாப்பிட்டு வாங்க ,செமையாக இருக்கும் .

இது தாங்க தொதல் .இங்கே கொஞ்சம் செய்முறை மாற்றம் பெற்றுள்ளது . ஆனால் மிகவும் இலகுவான முறையில் உள்ளதுங்க .

இது போல நீங்களும் இன்றே வீட்டில் தொதல் செய்து அசத்துங்க மக்களே .


இதனை share செய்யுங்கள்

Author: தமிழ் சமையல்