சுவையான லட்டு இப்படி செய்தால் கெட்டுப்போகாம இருக்கும்

சுவையான லட்டு இப்படி செய்தால் கெட்டுப்போகாம இருக்கும்
இதனை share செய்யுங்கள்

சுவையான லட்டு இப்படி செய்தால் கெட்டுப்போகாம இருக்கும்

சுவையான லட்டு இனி இப்படி செய்ங்க ,கெட்டுப்போகாம இருக்கா ,இந்த முறையில செய்தா ரெம்ப நாளுக்கு வீட்டில் வைத்து சாப்பிடலாம் .

லட்டு செய்வது எப்படி என்பதை இதில பார்க்கலாம் வாங்க .

செய்முறை ஒன்று

அடுப்பில கடையா (சட்டி ) வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .பாதம் மற்றும் பிஸ்தா போட்டு வறுத்திடுங்க .

முந்திரி பருப்பு வேர்க்கடலை போட்டு வறுத்திடுங்க
,உலர் திராட்சை போட்டு வறுத்திடுங்க .இவை யாவும் தங்க கலருக்கு வந்த பின்னர் கடாயில இருந்து எடுத்திடுங்க .

இப்போ அதே கடாயில ரவையை போட்டு வறுத்திடுங்க .குறைவான தீயில் வைத்து வறுத்துவாங்க .
ரவை சரியா வறுக்காம இருந்தா ரவை லட்டு பிடிக்கும் பொழுது கடினமா இருக்கும் .

அப்படி ரவையை சுதப்பாம இருக்க வடிவாக வறுத்துவங்க.இப்போ அது கூட DESICCATED COCONUTகலந்திருங்க .ரெம்ப நாள் கெட்டுப்போகாம இது பாதுகாக்கும் ,அதனால ,இதனை சேர்க்கிறோம் .

நெய்யில் ரவை வறு படும் பொழுது வாசம் வரும் ,அப்பொழுது சக்கரை போட்டு கொள்ளுங்க .சக்கரையை போட்ட பின்னர் நன்றாக கலந்து வறுத்து வாங்க .

நல்ல வறுத்து வரும் பொழுது ,பால் விட்டு கொள்ளுங்க .பாலைவிட்டு நன்றாக வறுத்து வாங்க .
லட்டு பிடிக்கும் பருவத்திற்கு ஏற்ப ஈர பதத்துடன் வறுத்து எடுத்து கொள்ளுங்க .

ஏலாக்காய் ,மற்றும் வறுத்து வைத்த கடலைகளை எல்லாம் சேர்த்து கலக்குங்க .சூடு ஆறிட முன்னர் ,லட்டை உருண்டையாக, பிடியாக பிடிக்கணும் .பிடித்து வாங்க .

கை மூலமும் பிடிக்கலாம் ,கரண்டியை வைத்து ஆச்சு போலவும் ,லட்டு செய்துக்கலாம் .

செமையாக லட்டு ரெடியாகிடிச்சு .இப்படி தாங்க லட்டு உருட்டி பிடிப்பது .
நம்ம வீட்டு லட்டு செமையாக இருக்குது .

இப்படி நீங்களும் லட்டு செய்து சாப்பிடுங்க .லட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பாங்க .

இப்போ நான் ஒரு கப் டீ கூட ஐந்து லட்டு சாப்பிட போகிறேன் .
லட்டு உங்களுக்கும் தரலாம் .நீங்களும் எடுத்து சாப்பிடுங்க .

இன்றைய நாள் சுலபமாக லட்டு செய்து முடிந்திருச்சு .


இதனை share செய்யுங்கள்

Author: தமிழ் சமையல்