நெத்திலி கருவாடு பொரியல் செமயா இருக்கு வாங்க சாப்பிடலாம்

நெத்திலி கருவாடு பொரியல் செமயா இருக்கு வாங்க சாப்பிடலாம்
இதனை share செய்யுங்கள்

நெத்திலி கருவாடு பொரியல் செமயா இருக்கு வாங்க சாப்பிடலாம்

நெத்தலி கருவாடு பொரியல் ,சமையலில் வீடே மணக்கும் வல்லமை பொருந்தியது , அந்த நெத்தலி கருவாடு .எப்படி வீட்டில்
பொரிப்பது என்பதை பார்க்கலாம் வாங்க.

நெத்தலி கருவாடு வறுவல் அல்லது பொரியல் செய்வது எப்படி .வாங்க நெத்தலி கருவாடு பொரியல் செய் முறைக்குள் போகலாம் வாங்க.

செய்முறை ஒன்று

நெத்தலி கருவாடானு அரை கிலோ நாம எடுத்துள்ளோம் .இப்போ இந்த நெத்தலி கருவாட்டின் தலைகளை அகற்றியுள்ளோம் .

நெத்தலி கருவாடு இப்போ தலை இல்லாது தயார் செய்ய பட்டுள்ளது .

அந்த நெத்தலி கருவாடு குடலையும் எடுத்திருங்க ,.கருப்பு கலரில் உள்ளதை அப்படியே எடுத்திருங்க ,கசப்பு இல்லாம இருக்க இப்படி பண்ணுங்க.

அப்புறம் கருவாட்டை ஐந்து முறை வடிவாக கழுவுங்க .நெத்தலியில் மண் இருக்கும் ,வடிவாக கழுவிடுங்க ,இல்லைன்னா ,மண் நெத்தலி பொரியலில் கடிபடும் .

அதாங்க வடிவாக கழுவுங்க ,

நன்றாக கருவாடு கழுவிய பின்னர் ,வேறு பாத்திரம் ஒன்றில் வைத்து கொள்ளுங்க.

இப்ப கடாயில ( சட்டி } எண்ணெய் ஊற்றிடுங்க ,கருவேப்பிலை ,பெரிய வெங்காயம் .கூடவே 10 பள்ளு நசுக்கிய பூண்டு .

சேர்த்து இப்போ நன்றாக வதக்கி வாங்க .வதங்கி வந்த பின்னர் வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க .

வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கி வந்த பின்னர் ,தேவையான உப்பு சேர்த்திடுங்க .

நெத்திலி கருவாடு பொரியல் செமயா இருக்கு வாங்க சாப்பிடலாம்

உப்பு அதிகம் சேர்த்திடாதீங்க .

இப்போ கழுவி வைத்த கருவாடு செத்திடுங்க ,மஞ்சள் தூள் கூடவே செத்திடுங்க .

மூன்று நிமிடம் வரை வதக்கி வாங்க .காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்திடுங்க

,வதங்கி வந்த பின்னர், தண்ணி கொஞ்சம் தெளித்து ,மூன்று நிமிடம் வேக வையுங்க .

நன்றாக வெந்து வந்ததும் ,நெத்தலி கருவாட்டை எடுத்துக்கலாம் .

இப்பொழுது நெத்தலி கருவாடு சாப்பிடும் நிலைக்கு ரெடியாகிடிச்சு .

இப்போ இந்த நெத்தலி கருவாட்டை சோறு,பரோட்டோ,தோசை ,இட்லி கூட சேர்த்து சாப்பிடலாம் .

நெத்தலி கருவாடு செமையாக வந்திருக்கு ,.இதுபோல நீங்களும் முயற்சித்து சமையல் செய்து பாருங்க .

நம்ம சமையல் தமிழ் எப்படி இருக்கு என்பதை சொல்லுங்க .

வீட்டில செம்மையான ,அட்டகாசமான நெத்தலி கருவாடு பொரியல் ரெடியாகிடுச்சு .மாப்புள்ள


இதனை share செய்யுங்கள்

Author: தமிழ் சமையல்